2026-ஆம் புத்தாண்டுத் தொடக்கத்தி லேயே வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸையும் அவர்களது நாட்டுக்குள்ளேயே புகுந்து சிறைப்பிடித்து உலகுக்கு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளது அமெரிக்கா.
ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்
கிட்டத்தட்ட சில மாதங்களாகவே வெனிசுலாவை அமெரிக்கா உளவு பார்த்துவந்தது. அந்நாட்டின் அதிபரான மதுரோவின் நடவடிக்கை கள் ஒவ்வொன்றையும் அமெரிக்கா மிகத்துல்லிய மாக அறிந்து வைத்திருந் தது. அதிபர், அவரது மனைவி, அவரது செல்லப் பிராணிகள் வரைக்கும் அமெரிக்க காசுக்கு விலைபோன வெனிசுலா அதிகாரிகள், அமெரிக்காவுக்கு தகவல் தந்து கொண்டிருந்திருக்கின்றனர்.
வெனிசுலா தங்களது நாட்டின் எல்லை வழியாக போதைப் பொருட்களைக் கடத்துவ தாகவும், அதை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கடந்த சில வாரங்களாகவே ட்ரம்ப் எச்சரித்தார். மேலும் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஸ்கிப்பர் என்ற கப்பலை டிசம்பர் 10-ஆம் தேதி சிறைபிடித்தது, அடுத்த ஒரு வாரத்தில் வெனிசுலாவை எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ளவிடாமல் கடற்படை துணையுடன் முற்றுகையிட்டது அமெரிக்கா.
இதற்கிடையில், அதிபர் மதுரோவை சிறைபிடிக்கும் நடவடிக்கைக்காக அமெரிக்க ராணுவம், தங்களது நாட்டில் அதிபர் மதுரோவின் இல்லம்போலவே அச்சு அசலாக ஒரு வீட்டை உருவாக்கி, பலமுறை அதை முற்றுகையிட்டு அவரைக் கைதுசெய்வதை ஒத்திகை மேற்கொண்டி ருக்கின்றது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/trump1-2026-01-08-18-18-00.jpg)
இறுதியாக, ஜனவரி 2-ஆம் தேதி ட்ரம்பிடமிருந்து போர் நடவடிக்கைக்கான உத்தரவு வந்தது. இதையடுத்து ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ் உயிர்பெற்றது. அந்நிய நாட்டுடன் போர் நடவடிக்கையில் இறங்க... அதிபர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒப்புதலைப் பெறவேண்டும். அப்படிச் செய்தால் திட்டம் வெளியே கசிந்துவிடும் என்ற சாக்குப்போக்குடன் அனுமதிபெறாமலே இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். ட்ரம்ப். இதையடுத்து தரை, வான், கடல்வழியென மும்முனைத் தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்கா.
150-க்கும் மேலான விமானங்கள் வெனிசுலா வின் தலைநகரான கராகஸ் மீது குண்டுவீசின. பிரான்சிஸ்கோ டி மிரான்டா விமானப் படைத்தளம், லா கார்லோட்டா விமானத் தளம், லா குவாய்ரா துறைமுகம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. வெனிசுலா ராணுவத்தின் கவனம் அதன்மீது குவிந்திருந்த நிலையில், அமெரிக்க ராணுவம் ஒரு தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்தி கராகஸ் நகரின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டது.
நள்ளிரவிலே அதிபர் மதுரோவின் இருப் பிடத்தை ராணுவக் குழுவொன்று அடைந்தது. கடுமையான பாதுகாப்புடைய அந்தக் கோட்டை யை முன்கூட்டியே ஒத்திகை பார்த்திருந்ததால் மிக எளிதாக வளைத்தது அமெரிக்க ராணுவம். நேராக அதிபரைச் சிறை பிடிக்க ராணுவம் விரைந்தது. ஒரு பாதுகாப்பு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்ள முயன்ற அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டனர்.
நாட்டின் அதிபரென்றும் பாராமல் விலங்குகள் அணிவித்து, அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டு, பின் ஹெலிகாப்டரில் நியூயார்க் கொண்டுசெல்லப்பட்டு அமெரிக்க நீதித்துறை காவலில் வைக்கப்பட்டனர் மதுரோவும் சிலியா ப்ளோரஸும்.
ஏன் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார்?
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நிறைய போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இதனால் தங்கள் நாடு பாதிக்கப்படுவதாக ட்ரம்ப் சொல்கிறார். ஆனால் சின்னக் குழந்தைகூட இதை நம்பாது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/trump2-2026-01-08-18-18-13.jpg)
உலகின் பெட்ரோலிய வளம் நிறைந்த நாடுகளில் ஒன்று வெனிசுலா. உலகத்தின் மொத்த பெட்ரோலிய இருப்பில் 17%, அதாவது 300 பில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு வெனிசுலாவில் உள்ளது. இன்றைய பெட்ரோலிய விலை சுமாராக 58 டாலர். ஆக, அதன் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதுபோக வெனிசுலாவில் எரிவாயு, பாக்சைட், தங்கம் போன்றவையும் உண்டு. ஆனால் உள்நாட்டு ஊழல் காரணமாக நாடு பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
2024-ல் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவரான எட்முண்டோ கோன்சாலஸ் தான் வெற்றிபெற்றார். ஆனால் அதிகார துஷ்பிரயோகம், மோசடியைப் பயன்படுத்தி, தானே வெற்றிபெற்றதாக அறிவித்தார் மதுரோ என்ற குற்றச்சாட்டும் உண்டு.
வெனிசுலாவிடம் எண்ணெய் வளம் இருந் தாலும் அவற்றை வெளியே எடுக்க தொழில்நுட்ப மும், முதலீடும் தேவை. அப்போதுதான் உதவிக்கு வந்தன அமெரிக்காவும், அந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும். ஆனால் அவர்கள் பிரதிபலனாக பெட்ரோலிய லாபத்தின் பெரும்பகுதியைச் சுரண்டிச் செல்வதைப் பார்த்து, 1976-ல் வெனி சுலாவின் அப்போதைய அதிபரான கார்லோஸ் ஆண்ட்ரஸ் பெரஸ் நாட்டின் எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கி வெளிநாட்டுக் கம்பெனிகளின் பிடியிலிருந்து விடுவித்தார்.
வெனிசுலாவின் பெட்ரோலியத் துறையில் தற்போது சீனக் கம்பெனிகள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. அதுபோக வெனிசுலாவுக்கு சீனா 17,000 கோடி கடன் தந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பிலிருக்கும் வெனிசுலா, டாலருக்கு மாற்றாக யுவான் போன்ற கரன்சிகளில் வணிகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவையனைத்தும் தான் அமெரிக்க தாக்குதலுக்குக் காரணம்.
"வெனிசுலாவின் ஆயில் இன்டஸ்ட்ரியை அமெரிக்க கம்பெனிகள்தான் கட்டமைத்தன. எங்களை வெளியே துரத்தியதன் இழப்பை அந்த ஆயிலை வைத்துதான் ஈடுகட்டுவோம்'' என்று மதுரோவை சிறைபிடித்தபின் வெளிப்படை யாகவே அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். அவரை சிறை பிடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன், “உங்களுக்குப் பிடித்த நாட்டில், உங்கள் கணக்கில் வேண்டிய அளவு பணத்தைப் போட்டு செட்டிலாக உதவுகிறோம். அமெரிக்காவிடம் சரணடையுங்கள்” என அமெரிக்கா மிரட்டியதாகத் தகவல்களும் தற்போது வெளியாகின்றன.
அமெரிக்க பொருளாதாரத்தின் அடித்தளம் இரண்டு. ஒன்று டாலர் சர்வதேச நாணயமாக மதிக்கப்படுவது. இரண்டாவது, பெட்ரோலிய வணிகத்தின்மீதான ஏகபோகம். வெனிசுலாவுக்கு சீனா கடன் தருவதும், சீனக் கம்பெனிகளுடன் வெனிசுலா பெட்ரோலியக் கம்பெனிகள் வர்த்தக நடவடிக்கையில் இறங்குவதும் பெட்ரோலிய வணிகத்தின் மீதான அமெரிக்காவின் ஏகபோகத் தை தவிர்க்கும். டாலரின் சரிவுக்கும் வழிவகுக்கும். இதனால் எரிச்சலான அமெரிக்கா, மதுரோவை சிறைபிடித்து அந்நாட்டின் பெட்ரோலிய வளத்தை தன்பிடிக்குள் கொண்டுவந்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/trump3-2026-01-08-18-18-39.jpg)
கோட்டைவிட்ட சீனா!
அமெரிக்காவின் நெருக்கடியால் வெனிசுலா அதிபர் குழப்பமான நிலையில் இருப்பதையறிந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைத்திருந்தது சீனா. அவர்களுடன் மதுரோ பேச்சுவார்த்தையும் நடத்திக்கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை முடிவதற்குள் சீனாவுக்கு பெப்பே காட்டிவிட்டார் ட்ரம்ப். இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், வெனிசுலாவுடனான நட்பை சமீபகாலமாகப் பலப்படுத்தி வந்த சீனா, அந்நாட்டுடன் வணிக உறவில் மட்டும் ஈடுபட வில்லை. வெனிசுலா பாதுகாப்புக்கும் சில உதவிகளை வழங்கிவந்தது. வெனிசுலாமீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தாமலிருக்க அவற்றின் எல்லையில், விமானங்கள், ஏவுகணைகள் பறந்தால் அவற்றைக் காட்டிக் கொடுக்கக்கூடிய ரேடார்களை யும் நிறுவியிருந்தது. இவற்றையும் அள்ளிக்கொண்டு போயிருக்கிறது அமெரிக்க ராணுவம். இவற்றை அக்குவேறு ஆணிவேறாக அலசி அதன் தொழில் நுட்பத்தையும் கையகப்படுத்திக்கொள்வதுடன், சீன ரேடாரை ஏய்க்கும் தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா ஆராய ஆரம்பிக்கும். ஆக, தன் தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடம் இழந்த வகையிலும் சீனாவுக்கு இழப்பு.
சிறைபிடிக்கப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும், போதைப்பொருள் கடத்தல், நார்கோ- தீவிரவாதம் ஆகிய குற்றச்சாட்டில் விசாரித்திருக்கிறது நியூயார்க் கோர்ட். தம்பதி இருவரும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு, "நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதி, குற்றமற்றவன்' என மறுத்திருக்கிறார் மதுரோ. மதுரோவின் மனைவி சிலியாவின் முகத்தில் சில காயங்கள் காணப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் மனைவி என்றுகூட பொருட் படுத்தாமல் அவர் ராணுவத்தால் தாக்கப் பட்டிருக்கிறார் என சர்ச்சையாகியிருக்கிறது. மதுரோவின் சார்பாக ஜுலியன் அசாஞ்சேவுக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் பாரி போலாக் வாதாடியுள்ளார்.
நீண்டகாலத் தாக்கம்
தற்போதைக்கு ட்ரம்புக்கு வெற்றிகரமான இந்த நடவடிக்கை, நீண்டகால அளவில் அமெரிக்காவுக்கு பின்னடைவையே தரும். ஒட்டுமொத்தமாக உலக நாடுகள் அனைத்தையும் பகைக்கும் ட்ரம்பின் போக்கு, எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு வீழ்ச்சியையே ஏற்படுத்தும் என்கிறார்கள் சர்வதேச நோக்கர்கள்.
அதேசமயம் இந்தியா இந்த விவகாரத்தில், அதிபர் கடத்தப்பட்டதைக் கண்டிக்காமல் வெகுஜாக்கிரதையாக, “"வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக் கான ஆதரவை இந்தியா வலியுறுத்து கிறது'’என பட்டும்படாமல் அறிக்கை விடுத்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t105212699z-sub-2026-02-07-16-22-08.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/08/trump-2026-01-08-18-17-46.jpg)